வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கப்போகும் முக்கிய மைல்கல் - வட மாகாண ஆளுநர்

Jaffna Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Kajinthan Aug 10, 2026 12:03 PM GMT
Report

வட மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக ஸ்மார்ட் மரைன் லங்கா (Smart Marine Lanka) நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகம் அமைவதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் தளபாடச் சேவைகளை நெருக்கமாகக் கொண்டு வரும் இந்த முயற்சி, வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனம் தனது யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தை இன்று (10.08.2026) யாழ்ப்பாணம், கண்டி வீதியில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செயலகத்தின் முதலாம் மாடியில், வடக்கு ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கப்போகும் முக்கிய மைல்கல் - வட மாகாண ஆளுநர் | Company To Be Established In The Northern Province

வட மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சி

அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சியில் காங்கேசன்துறை துறைமுகத்தின் மீளுருவாக்கமும் அதனூடான கப்பற் போக்குவரத்து வளர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்ட ஆளுநர், வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய, மீன்பிடி மற்றும் சிறு, நடுத்தர தொழில்துறைப் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு விரைவாகவும் போட்டித்தன்மையுடனும் கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதில் இந்நிறுவனத்தின் வருகை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக திருகோணமலை மற்றும் கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்படவுள்ள நேரடி பொருட்கள் கப்பற் போக்குவரத்து சேவை, வடக்கு மாகாணத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கப்போகும் முக்கிய மைல்கல் - வட மாகாண ஆளுநர் | Company To Be Established In The Northern Province

இதன்மூலம் பொருட்களை குறுகிய காலத்திலும் குறைந்த செலவிலும் கொண்டு செல்லும் வாய்ப்பு உருவாகுவதுடன், வர்த்தகர்களின் செயற்பாட்டுத் திறனும் மேம்படும் என்றார்.

யாழ்ப்பாணத்தில் களஞ்சியசாலைகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதிகள் மற்றும் தளபாட மையங்களை அமைக்கும் நிறுவனத்தின் திட்டம் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு பெரும் நன்மையை வழங்கும். குறிப்பாக மாம்பழம், முருங்கை மற்றும் ஏனைய பழங்கள், காய்கறிகள் போன்ற விரைவில் பழுதடையக்கூடிய விளைபொருட்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் பாதுகாத்து, சந்தை விலை உயர்ந்த காலத்தில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பு இதன்மூலம் உருவாகும் என்பதுடன், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளையும் குறைக்க முடியும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

தேவையற்ற தாமதங்கள் கணிசமாகக் குறையும்

இந்தியாவிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இனி கொழும்பு துறைமுகத்தைச் சாராமல் காங்கேசன்துறை துறைமுகத்தை நேரடியாக வந்தடையும் சூழல் உருவானால், போக்குவரத்து நேரம், கையாளும் செலவு மற்றும் தேவையற்ற தாமதங்கள் கணிசமாகக் குறையும்.

வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கப்போகும் முக்கிய மைல்கல் - வட மாகாண ஆளுநர் | Company To Be Established In The Northern Province

அதேவேளை, வணிகர்களின் முதலீட்டுச் சுழற்சியும் விரைவடைவதன் மூலம் அதன் நன்மைகள் பொதுமக்களையும் சென்றடையும். ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனம், கப்பல் முகவர் சேவைகள், பொருட்கள் போக்குவரத்து சேவைகள், தளபாட முகாமைத்துவம், கப்பல் மற்றும் விமான வழி பொருட்கள் கையாளல், கொள்கலன் சேவைகள், சுங்க அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை யாழ்ப்பாணத்திலிருந்தே வழங்கவுள்ளது.

இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் நிறுவனம் கொண்டுள்ள வலையமைப்பின் ஊடாக வடக்கு மாகாணத்தின் வர்த்தகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும், காங்கேசன்துறை துறைமுகத்தை மையமாகக் கொண்ட பிராந்திய வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வடக்கு மாகாணத்தை சர்வதேச கப்பற் போக்குவரத்து மற்றும் தளபாட வலையமைப்புடன் மேலும் வலுவாக இணைப்பதற்கும் இக்கிளை அலுவலகத்தின் ஆரம்பம் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கப்போகும் முக்கிய மைல்கல் - வட மாகாண ஆளுநர் | Company To Be Established In The Northern Province

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள், வர்த்தக மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்

அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்

கொழும்பில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் - இரகசிய நடவடிக்கையில் சிக்கிய நபர்

கொழும்பில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் - இரகசிய நடவடிக்கையில் சிக்கிய நபர்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US