கட்சியில் புதியவர்கள் சேருவதும் இருப்பவர்கள் விலகுவதும் அரசியலில் சகஜம்-பசில் ராஜபக்ச
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்த சிலர் விலகி தனித்து போட்டியிடுவது சவாலாக இருந்தாலும் சவால்களை வெற்றிக்கொள்ளுத் அனுபவம் தனக்கு இருப்பதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்து்ளளார்.
தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்ற நம்பிக்கையில் பணிகளை ஆரம்பித்தோம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதை முன்னிட்டு கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான நேற்று கண்டிக்கு சென்றிருந்த பசில் ராஜபக்ச செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்ற நம்பிக்கையில் பொதுஜன பெரமுன தேர்தல் பணிகளை ஆரம்பித்தது. வேட்புமனு தாக்கல் செய்வதும் ஒத்திவைக்கப்படும் என சிலர் கூறிய போதிலும் அப்படி நடக்கவில்லை. முதலில் எமது கட்சியே கட்டுப்பணத்தை செலுத்தியது.
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 252 சபைகளுக்கு தனித்து போட்டியிடுகிறது. மேலும் சில சபைகளுக்கு ஏனைய கட்சிகளுடன் கூட்டணியாக போட்டியிடுகிறது.
யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்தில் போட்டி
யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும் மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் மேலும் சில சபைகளுக்கு படகு மற்றும் ஏனைய சின்னங்களிலும் போட்டியிடுகிறது.
கட்சிகளில் புதியவர்கள் சேருவதை போல், கட்சியில் இருப்பவர்கள் வெளியேறுவது அரசியலில் சகஜம். அப்படியான நேரங்களில் சவால்களை வெற்றி கொள்ள முடியுமாக இருக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்ததும் இப்படியான நடவடிக்கையே.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு சுதந்திரத்தின் பின்னர் 74 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
74 ஆண்டுகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சில ஆண்டுகள் மட்டுமே நாடடை ஆட்சி செய்தது எனவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

கனடாவுக்குச் செல்லவேண்டாம்... பிரித்தானியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்ல சர்வதேச மாணவர்களுக்கு ஆலோசனை News Lankasri

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri
