தமிழர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சர்ச்சை! உடன்படமாட்டோம் என்கிறார் சிறீதரன்
கொல்லப்பட்டவனும், கொலை செய்தவனும் வணக்கத்திற்கு உரியவனாக ஒரு தூபியில் மாற்றப்படுவதை முழுமையாக எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
போர் காரணமாகவும், போராட்டங்களினாலும் உயிரிழந்தோரை நினைவு கூரும் வகையில் கொழும்பில் பொது நினைவுத் தூபி அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள விவகாரம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்ச்சைகளையும் தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் லங்காசிறிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் காரணமாக சிங்கள மக்கள் இறந்திருந்தால் அல்லது சிங்கள மக்களுடைய இராணுவத்தை சேர்ந்தவர்கள் இறந்திருந்தால் நீங்கள் அவர்களுக்காக தூபி கட்டுவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சபனைகளும் இல்லை.
ஆனால் ஒரு பொதுத்தூபியாக அதிலே தான் கொல்லப்பட்டவனும், கொலை செய்தவனும் வணக்கத்திற்கு உரியவனாக மாற்றப்படுவதை நாங்கள் 100 வீதமும் எதிர்க்கிறோம். அதனை கண்டிக்கிறோம். அவ்வாறான தூபிக்கு நாங்கள் உடன்படவில்லை என்பதை மிகத் தெளிவாகவே முன்வைக்கிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |