கரைச்சி அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஆராயவுள்ள ஒருங்கிணைப்பு குழு
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழுக்கூட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் திரு முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரனும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அருணாசலம் வேலமாளிதன், பிரதேசசபையின் உறுப்பினர்கள், பொலிஸார் மற்றும் இரானுவத்தினர், அரச திணைக்களங்களின் அதிகாரிகள், கிராமவையாளர், விவசாயிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் பல வருட காலமாக குடியிருப்பதற்கு சொந்தமாக ஒரு காணி கூட இல்லாதவர்களுக்கு மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றைய நிகழ்ச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானங்களுக்கு அமைவாக அப்பகுதியில் வாழ்கின்ற காணி இல்லாத 125 குடும்பங்களுக்கு அப்பகுதியில் உள்ள அரச காணியினை அந்த மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என தீர்மானங்கள் எட்டப்பட்டன.
கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள பல அரச காணிகள் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ளதாகவும் சில காணிகள் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரிடமோ அல்லது பிரதேச செயலாளரிடமும் கையளிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. இவைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி விடுவிக்கப்படாத காணிகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கைவிடப்பட்டிருக்கின்ற காளைகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிளை நொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவைகள் பல பகுதிகளில் பழுதடைந்தும் பாதுகாப்பு கடமைகள் இல்லாத காரணத்தினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக பாதுகாப்பு கடமைகளை அமைக்க வேண்டுமென பொது அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக பாதுகாப்பு கடமவைகளை உரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடை தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி அக்கறையான் பகுதியில் பல குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற முடியாத நிலையில் தண்ணிக்கு அல்லது வருவதாகவும் இதற்கு உரிய தீர்வு எட்டப்பட வேண்டும் என பொது அமைப்புகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக தற்காலிகமாக பிரதேச சபையின் ஊடாக மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை உடனடியாக வழங்குவதற்காக பிரதேச சபையின் தவிசாளர் வேலமாளிதன் இணக்கம் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இம்முறை வடபகுதிகளுக்காக 13 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது இவைகளை மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எமது நோக்கம் எனவும் அவ்வாறு செய்வதன் மூலமாக நாட்டில் உள்ள பல்வேறு வகையான தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயிர் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார் அத்துடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி - கரைச்சி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள் மற்றும் மத்திய மாகாண அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆரயப்படவுள்ளன.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (16-07-2025) பகல் 9.15 மணிக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரனின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
கலந்து கொண்டவர்கள்
குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன் துறைசார் திணைக்களங்களின் திணைக்கள தலைவர்கள், பொலிஸ், உயரதிகாரிகள் கடற்படை கிராமசேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கிராமங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அதேநேரம் மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீடுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலை திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதுடன் குறித்து பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மனல் அகழ்வு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டவுள்ளன.






ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 23 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
