மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டம்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டம், கூட்டணியின் தலைவர் த.ராஜலிங்கம் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான வ.குபேரன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.யோகராஜா, இணைப்பொருளாளர்களான வ.சந்திரன், தி.சம்பந்தன், நிருவாகச் செயலாளர் கௌரிகாந்தன் உள்ளிட்ட வடகிழக்கைச் சேர்ந்த கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், கட்சி முகங்கொடுக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டதுடன். முக்கிய பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
தமிழ்த் தேசியத்தோடு இணைந்து செயற்படும் கட்சிகளுடன் கூட்டிணைந்து செயற்படுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளல், கட்சியின் யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டு பொதுச் சபை அங்கீகாரத்துடன் மாற்றியமைத்தல்,
ஆனந்தசங்கரி அவர்களின் தனிப்பட்ட நலனுக்காக கட்சியினை பின்னடையச் செய்தமை
மட்டுமல்லாது கட்சி உறுப்பினர்களைத் தவறான முறையில் வழிநடத்தியமை மற்றும்
கட்சி அலுவலகத்தினைத் தனிப்பட்ட நலன்கருதி பயன்படுத்துகின்றமை போன்ற
செயற்பாடுகள் தொடர்பில் ஒழுக்காற்றுக் குழுவினூடாக அவர்மீது சட்ட நடவடிக்கை
எடுத்தல், தமிழ்த் தவைர்களின் உருவச் சிலைகளை நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளல், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் இணைந்து செயற்பட்டு
அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காகப் பணியாற்றல், தற்போது மக்களின்
அவல நிலையைக் கருத்திற் கொண்டு அதற்கேற்ற நடைமுறைகளை முன்னெடுத்தல் போன்ற
விடயங்கள் குறித்து இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
