பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் அதிரடியாக பணியிடை நீக்கம்
பௌத்த விவகார ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய பிரேமசிறி ரத்நாயக்கவின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பணியிடை நீக்கம்
அமைச்சரவை முடிவின் பேரில் இந்த இடைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தின் பதவியை தற்காலிகமாகப் பொறுப்பேற்க, கூடுதல் ஆணையாளராக உள்ள கசுன் வெல்லஹேவா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024 ஜனவரி மாதம் பிரேமசிறி ரத்நாயக்க பௌத்த விவகார ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணியிடை நீக்கம் எதனால் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விபரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan