மாகாண சபைத் தேர்தலுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்: அரவிந்தகுமார்

Election Commission of Sri Lanka Ministry of Education Sri Lanka Politician Sri Lankan political crisis Sri Lankan local elections 2023
By Rakesh Mar 11, 2023 03:15 AM GMT
Report

உள்ளூராட்சி சபைத் தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே தேர்தல் ஆணைக்குழு முன்னுரிமை வழங்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10.03.2023) நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மாகாண சபைத் தேர்தலுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்: அரவிந்தகுமார் | Commission Priority Provincial Council Elections

மாகாண சபைத் தேர்தல்

அவர் மேலும் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

என்னைப் பொறுத்த வரையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதனால் தான் எமது மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி சபைகளில் எனது தலைமையில் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல் செய்தது. உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் இன்னும் முடிவடையவில்லை.

மாகாண சபைத் தேர்தலுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்: அரவிந்தகுமார் | Commission Priority Provincial Council Elections

ஆனால், மாகாண சபைகள் கலைக்கப்பட்ட நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் 4 வருடங்களாக நிலுவையில் இருக்கின்றது.

அதனால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே தேர்தல்கள் ஆணைக்குழு முன்னுரிமை வழங்க வேண்டும்.

பொருளாதாரம் தற்போது ஓரளவு ஸ்திர நிலை

மேலும் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது ஓரளவு ஸ்திர நிலைக்கு வர ஆரம்பித்திருக்கின்றது.

நாடு சுமூகமான நிலைக்கு வந்துகொண்டிருக்கின்றது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. அதனால் ஹோட்டல்கள் நிரம்பி வழிய ஆரம்பித்திருக்கின்றது.

மாகாண சபைத் தேர்தலுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்: அரவிந்தகுமார் | Commission Priority Provincial Council Elections

ஆனால், இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

இந்தச் சூழ்ச்சியில் மக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது.

பெருந்தோட்ட மக்கள் 

பெருந்தோட்ட மக்கள் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் முகம்கொடுத்து வரும் மக்களாகவே உள்ளனர். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. அவர்களின் தொழில் மதிக்கப்படுவதில்லை.

மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலேயே அவர்கள் தோட்டங்களில் தொழில் செய்து வருகின்றனர்.

மாகாண சபைத் தேர்தலுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்: அரவிந்தகுமார் | Commission Priority Provincial Council Elections

அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் எமது மக்கள் மீது காட்டப்பட்டு வரும் பாரபட்சம் ஒழிக்கப்பட வேண்டும்.

தேசிய நீராேட்டத்துக்குள் மலையக மக்கள் உள்வாங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US