தேர்தல் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து
நாட்டில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கம் அறிவித்துள்ளார்.
தேர்தல்
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அரசாங்கம் உறுதி செய்ததன் பின்னரே தேர்தல் நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் பொருத்தமான 225 பேரை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மக்கள் தெரிவு
நாடாளுமன்றிற்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களைச் சார்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை கட்டி எழுப்புவதற்கு அரசியல்வாதிகளும், நாட்டு மக்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
