வவுனியா ஏ-9 வீதியை அகலப்படுத்தும் திட்டம் ஆரம்பம்
ஏ9 வீதியின் வவுனியா நகரப்பகுதியில் 3 கிலோமீற்றர் தூரம் அகலப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தத் திட்டத்தை நேற்று (24.11) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்தத் திட்டமானது 176 ஆவது கிலோமீற்றர் பகுதியில் இருந்து தாண்டிக்குளத்தை அண்மித்த பகுதி வரை விருத்தி செய்யப்படவுள்ளது.
இரு வழிப்பாதை
அந்தவகையில் ஆரம்ப இடத்தில் இருந்து வவுனியா தெற்கு கல்வி வலயம் வரை இரு வழிச்சாலையாகவும், அதிலிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி வரைக்கும் நான்கு வழிச் சாலையாகவும், அதிலிருந்து வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டம் வரைக்கும் இரு வழிப்பாதையாக மாற்றப்படுகின்றது.
அதிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை மீண்டும் நான்கு வழி பாதையாகவும் மாற்றப்படுகின்றது.

மணிக்கூட்டு கோபுர பகுதியில் இருந்து வைத்தியசாலை சுற்றுவட்டம் வரை பழமையான மரங்கள் உள்ளமையால் அதனை பாதுகாக்கும் நோக்குடனும் இரு வழிச்சாலையாக மாற்றப்படுகின்றது.
குறித்த திட்டத்திற்காக 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான ஒப்பந்தகாலம் 18 மாதங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வீதி விளக்குகள்,நடைபாதைகள், என பல வசதிகள் அமைக்கப்படவுள்ளது.
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan