வடக்கில் துயிலுமில்ல சிரமதான பணிகள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள்(Video)
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மாவீரர் துயிலுமில்லங்களில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வாகரை
மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக வாகரையில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (13.11.2022) நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் வாகரை கண்டலடி துயிலுமில்லம் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது முன்னாள் போராளிகள், நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணியினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி:நவொஜ்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டம், மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுமையான சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (13.11.2022) முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரையும் துயிலும் இல்லத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சிரமதானப் பணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் த.சுரேஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை, தென்மேற்கு பிரதேச கிளையின் செயலாளர் பொ.நேசதுரை, தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி பொருளாளர் நடராசா மற்றும் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி:ராகேஷ்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தேவிபுரம் பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மக்களால் நேற்று (13.11.2022) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் கார்த்திகை 27 அன்று மாவீரர் நாளினை நினைவிற்கொள்வதற்காக மக்கள் தயாராகி வருகின்றார்கள்.
தேவிபுரம் ஆ. பகுதி மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வந்து தங்கள் உறவினர்களை வருகைதந்து மாவீரர்களை நினைவிற்கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி:கீதன்
வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வு
மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் 33வது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வு நேற்று(13.11.2022) யாழிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் கார்த்திகை மாவீரர்களின் அர்ப்பணிப்புக்கள், தியாகங்களை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்தி: கஜிந்தன்
ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக விசாரணை
முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று(13.11.2022) மாவீரர் நாளுக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தை ஆக்கிரமித்து படைமுகாம் அமைத்துள்ள 592 ஆவது பிரிகேட் முகாமின் கட்டளை அதிகாரி இராணுவ முகாமுக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி இராணுவ முகாமுக்கு சென்ற ஏற்பாட்டாளர்களை விசாரித்த 592ஆவது பிரிகேட் முகாமின் அதிகாரி மாவீரர் நாளினை இப்பகுதியில் அனுஷ்டிக்க முடியாது என எச்சரித்ததோடு இப்பகுதி முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமான பகுதி எனவும் வேண்டும் என்றால் நீங்கள் துப்பரவு செய்யலாம் ஆனால் 27ஆம் திகதி சுடர் ஏற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இறந்த எமது உறவுகளை நினைவு தடை எதுவும் இல்லை என அரசாங்கம் கூறியுள்ள போதிலும் இராணுவத்தினர் இவ்வாறு நடந்துகொள்கின்கிறீர்கள்.
இருந்தாலும் எமது உறவினர்களை நினைத்து நாங்கள் அஞ்சலிப்பதை தடுக்க வேண்டாம் என கூறிவிட்டு மீண்டும் வந்து துயிலும் இல்ல வளாகத்தை துப்பரவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தி:குமணன், கீதன்
அனைவரும் ஒன்றிணைந்து விளக்கேற்ற முன்வர வேண்டும்
மட்டக்களப்பிலுள்ள மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் நாளை முன்னிட்டு இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது சிரமதானத்தினை ஆரம்பித்துவைத்து கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், உயிரிழந்த மாவீரர்களின் பெற்றோர்கள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள். இந்நிலையில் வருடா வருடம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நாம் நினைவு கூர்ந்திருக்கிறோம்.
ஆகவே, வடகிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05மணிக்கு அரசியல் கட்சி வேறுபாடுகள் மறந்து அனைவரும் ஒன்றிணைந்து விளக்கேற்றமுன்வரவேண்டும் என்பதுடன் அன்றைய தினம் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு தமிழ் மக்கள் சென்று அஞ்சலி செலுத்துவது கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
செய்தி:குமார்
மட்டு மாவட்டத்தில் 4 மாவீர் துயிலும் இல்லங்கள் தயார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு வாகரை, மாவடிமுன்மாரி, தரவை, தாண்டியடி ஆகிய 4 துயிலும் இலங்களில் எதிர்வரும் 27ம் திகதி சென்று விளக்கு ஏற்றுவதற்காக போக்குவரத்து உட்பட அனைத்து நடவடிக்கையும் செய்யப்பட்டுள்ளது.
எனவே துயிலும் இல்லங்களுக்குச் சென்று விளக்கேற்ற முடியாதவர்கள் தங்களது இல்லங்களில் குறித்த நேரத்திற்கு விளக்கேற்றுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே 27ம் திகதி துயிலும் இல்லங்களுக்கும் செல்லமுடியாதவர்கள் அவர்களது வீட்டில் குறித்த நேரத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
செய்தி: பவன்

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
