மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் நினைவு தினம்
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 கடற்றொழிலாளர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் (Jaffna) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவுதின அஞ்சலி நிகழ்வானது யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 கடற்றொழிலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்று (10.06.2024) இடம்பெற்றுள்ளது.
இந்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள், கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கொல்லப்பட்ட கடற்றொழிலாளர்களுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் அவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
படுகொலை
1986ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் 31 பேரும் மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri