மன்னாரில் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் நினைவேந்தல் (Photos)
மன்னார், வங்காலை பகுதியில் 1985 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட அப்பாவி சிறுவர்கள் மற்றும் பொது மக்களின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டுள்ளது.
வங்காலை புனித ஆனாள் தேவாலயத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக இன்று நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
1985 ஆண்டு தை மாதம் 6ஆம் திகதி வங்காலை தூய ஆனாள் ஆலய பங்கு பணி செயலாளராக கடமையாற்றிய அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் தங்கியிருந்த அப்பாவி சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் 10 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 37 ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குழுக்கள் இணைந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
இதன்போது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர், அயரின் செயலாளர் உள்ளடங்களாக அருட்தந்தையர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அருட்பணி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளதுடன்,வருகை தந்தவர்களும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.





