திலீபனுக்கு எவ்வாறு நினைவேந்தல் அனுஷ்டிக்க முடியும்: தயாசிறி எம்.பி. கேள்வி
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், திலீபனுக்கு எவ்வாறு நினைவேந்தல் அனுஷ்டிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(06.10.2026) நடைபெற்ற அமர்வின்போது, வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையிலேயே அவர் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவிடம் மேற்படி கேள்வியை எழுப்பினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டதில்லை. இனவாதத்தை முன்னிலைப்படுத்தாததுடன் தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளேன்.
திலீபனின் நினைவேந்தல்
வடக்கில் கடந்த மாதம் திலீபனுக்கு உருவச்சிலை வைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் பின்னர் ஆயுதப் போராளியாக அறிவிக்கப்பட்டு ‘ லெப்டினன்ட் கேணல்’ பதவிக்குத் தரமுயர்த்தப்பட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் நினைவேந்தல் அனுஷ்டிப்பதும், திலீபனுக்குச் சிலை வைத்துப் பின்னர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றமையும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
நாட்டைப் பிளவுபடுத்தவோ அல்லது அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கவோ மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிலையில், ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளில் எவ்வாறு கலந்துகொண்டார்கள்." - என்றும் அவர் கேள்வு எழுப்பினார்.
22 வருடங்களுக்குப் பின்னர் தீர்ப்பு - மூதூர் மக்கள் வங்கி வழக்கில் 40 இலட்சம் ரூபாய் செலுத்த உத்தரவு