கல்லறை முன் கனத்த இதயத்துடன் ஈச்சங்குள துயிலுமில்லத்தில் விழுந்த கண்ணீர் துளிகள் !
வவுனியாவில் பிரதான மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள ஈச்சங்குளம் பகுதியில் கனத்த இதயம் கொண்ட உணர்வெழுச்சியுடன் உறவுகளினால் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் போது மணி ஒலிக்கப்பட்டு, ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தின் பிரதான ஈகைச்சுடரினை இரு.மாவீரர்களின்.தாயாரான பாலசிங்கம் பாக்கியத்தினால் ஏற்றி வைக்கப்பட்டது.
இதனையடுத்து நினைவேந்தலில் கலந்து கொண்ட மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
உணர்வு பூர்வமாக அஞ்சலி
கண்ணீர் மல்க, மலர் தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக உயிரிழந்த வீரர்களுக்கும் தமது உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதில் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், உறவினர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் மாவீரர் தின நினைவேந்தல் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது கேணல் ஐயன், மேஜர் வாணி ஆகிய மாவீரர்களின் தாயாரினால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் மாவீரர் நினைவுருவ படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
உலக நாடுகளில் இடம் பெறும் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகளை இங்கே பார்வையிடலாம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
    
    குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        