ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த முன்வாருங்கள் - பிரதமர் அழைப்பு
வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மெல்ல மெல்ல முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் சிறந்த ஒரு தலைவரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்நிலையில், எதிரணியினர் கட்சி வேறுபாடுகளை மறந்து நாட்டின் நன்மை கருதி ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த முன்வர வேண்டுமெ பிரதமர் தினேஷ் குணவர்த்தன அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் சமகால நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்தி
மூன்றாம் வாசிப்பும் பெரும்பான்மையுடன் நிறைவேறும். அதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
தற்போதைய நிலமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்.

அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்கள்
வாக்களித்த மக்களின் நலனைப் பற்றியே கவனம் செலுத்த வேண்டும். ஆனால், எதிர்க்கட்சியினர் அதற்கு மாறாகச் செயற்படுகின்றனர்.
அவர்கள் தங்களைச் சுயபரிசோதனை செய்ய வேண்டும். என்னதான் சவால்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு இந்த அரசாங்கம் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri