கொழும்பில் நடந்த பயங்கரம்: தொலைபேசிக்காக கொலை செய்யப்பட்ட இளைஞன்
கிராண்ட்பாஸ், புதிய களனி பாலத்திற்கு அருகில் உள்ள பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் சேதவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கொலையைச் செய்த சந்தேகநபர், உயிரிழந்தவரிடம் கையடக்கத் தொலைபேசியைக் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
சந்தேக நபர்கள் கைது
கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை கிராண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு 14 மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 6 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
