கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! இடையில் குழப்பம் விளைவித்த சிலரால் பரபரப்பு..
கொழும்பு- வெள்ளவத்தை கடற்கரையில் பகுதியில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தலின் போது சிங்கள ராவய அமைப்பினர் அங்கு வந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) கொழும்பு- வெள்ளவத்தை கடற்கரையில் தீபச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது சிங்கள ராவய எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த இடத்திற்கு வருகை தந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பலமான எதிர்ப்பு
இந்த நினைவேந்தலில் கலந்துக்கொண்டவர்கள் விடுதலைப்புலி அமைப்பின் பணத்தை பெற்று செயற்படுபவர்கள் என்றும், பலஸ்தீனுக்கு ஆதரவாளர்கள் என்றும், இஸ்ரேவுக்கு எதிரானவர்கள் என்று சிங்கள ராவய அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இவ்வாறான கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நினைவேந்தல் நடைபெற்று முடிந்து திரும்பும் போது சிங்கள ராவய அமைப்பினர் சத்தமிட்டு பலமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடும் பாதுகாப்பு
இதன்போது பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினார்கள், பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில்தான் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்துக்கொண்டுள்ளார்.
நினைவேந்தலில் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி அனுஷ்டித்தனர். அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.






Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
