யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரி

Sri Lanka Police Jaffna Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Kajinthan May 18, 2025 07:53 AM GMT
Report

யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரால் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்து கொடுத்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மாணவர்களுக்கான கருத்தரங்கு என கூறி நேற்றுமுன்தினம்(16) மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலையில் பெண் மாணவர்களை ஒழுங்குபடுத்துமாறு கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த நிகழ்வுக்கு செல்லுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் அறிவித்திருந்தார்.

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! இடையில் குழப்பம் விளைவித்த சிலரால் பரபரப்பு..

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! இடையில் குழப்பம் விளைவித்த சிலரால் பரபரப்பு..

மதகுரு என்றொருவர் 

அந்தவகையில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் அந்த நிகழ்வுக்கு சென்றிருந்தனர்.

அங்கே கிறிஸ்தவ மதகுரு என்றொருவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு ஆண் ஒருவர் வந்து நிகழ்வை ஆரம்பித்துள்ளார்.

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரி | Police Officer Who Caused Controversy In Jaffna

இதன்போது தனியார் நிறுவனம் ஒன்றின் தயாரிப்பிலான சுகாதார துவாயை காண்பித்து அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தை அந்த மதகுரு வழங்கியுள்ளார்.

ஆணொருவர் இவ்வாறு விளக்கம் கூறுவதால் அங்கிருந்த பெண் பிள்ளைகள் சங்கடத்துக்குள்ளாகியுள்ளனர்.

மாணவர்களுக்கான கருத்தரங்கு என  பொய் கூறி  

இதனை பார்த்து சங்கடத்துக்குள்ளான சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், பொலிஸ் உத்தியோகத்தரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். 

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரி | Police Officer Who Caused Controversy In Jaffna

பின்னர் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பெண் பிள்ளைகள் அனைவருக்கும் ஒவ்வொரு பொதி வழங்கப்பட்டுள்ளது.

அதில் சுகாதார துவாயும், பெண் பிள்ளைகளின் உள்ளாடையும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான கருத்தரங்கு என பொய் கூறி யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு தனியார் உற்பத்திகளுக்கு பாடசாலையில் விளம்பரத்துக்கான களம் அமைத்துக் கொடுத்தமையும், ஆணொருவர் பெண் பிள்ளைகளின் அந்தரங்க விடயம் தொடர்பாக விளக்கமளித்தமையும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் பசில்

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் பசில்

மட்டக்களப்பு- கல்லடி பாலத்தில் இரண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தூபிகள் மிதந்து வந்ததால் பரபரப்பு!

மட்டக்களப்பு- கல்லடி பாலத்தில் இரண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தூபிகள் மிதந்து வந்ததால் பரபரப்பு!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US