பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் நனைகிறது முள்ளிவாய்க்கால் மண்..
புதிய இணைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டதன் பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றிவைக்கப்பட்ட பின்னர் சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது.
தகவல் - கஜிந்தன்
முதலாம் இணைப்பு
தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இறந்த உறவுகளிற்கு அஞ்சலி செய்வதற்ககாக எழுச்சிபெற்றுள்ளது.
அஞ்சலி செலுத்த தயார்..
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகிய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் நினைவுகளை மீட்டி அஞ்சலி செலுத்த தயாரான நிலையில் எழுச்சிபெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தில் பொதுமக்கள் அனைவரும் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
ஆத்மசாந்தி பிரார்த்தனையை அடுத்து நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



















