அடுத்த 2-3 வாரங்களுக்குள் திட்டம் மாற்றப்படலாம்...! கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (05) இரவு 8 மணி முதல் நாளை (6) காலை 8 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான வானிலை மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையினால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகத் தடையினால் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு, தமக்குத் தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அத்துடன், நிலவும் வரட்சியான வானிலையைக் கருத்திற்கொண்டு நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
பண்டிகை காரணமாக ஏப்ரல் 11, 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் எவ்வித இடையூறும் இன்றி நீர் விநியோகம் செய்யப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் தலைவர் சந்தன பண்டார இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
திட்டம் மாற்றப்படலாம்
அடுத்த 2-3 வாரங்களுக்குள் லபுகம மற்றும் கலத்துவாவ நீர்த்தேக்கப் பகுதிகளில் மழை பெய்தால், தற்போதைய திட்டம் மாற்றப்படலாம்.

தற்போதைய நீர் விநியோகக் கட்டுப்பாடு 18 அல்லது 12 மணி நேரமாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏப்ரல் 10 வரை நடைமுறைபடுத்தப்படும்.
தற்போது, கலத்துவாவ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 9 அடியாகவும், லப்புகம நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் சுமார் 23 அடியாகவும் குறைந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்கு நீர் வழங்கும் இரண்டு முக்கிய நீர் ஆதாரங்கள் லபுகம மற்றும் கலத்துவாவ நீர்த்தேக்கங்கள் ஆகும்.
அடுத்த 2 - 3 வாரங்களில் கனமழை
ஆனாலும், அம்பத்தளை நீர் நிலைகளில் விசேடமான பிரச்சினை எதுவும் இல்லை என்றாலும், கொழும்பு மாவட்டத்திற்கு எடுத்துவரப்படும் நீரின் அளவு தற்போது சுமார் 15,000 கன மீட்டர் என்ற மிகச் சிறிய அளவில் குறைக்கப்பட்டு வருகின்றது.

தற்போது எடுத்துவரப்படும் நீரின் அளவை இதே முறையில் பயன்படுத்தினால், நீர்மட்டம் மேலும் 20 நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்.
வானிலை ஆய்வுத் துறையின் வானிலை முன்னறிவிப்பின்படி, அடுத்த 2 - 3 வாரங்களில் கனமழை பெய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே, லபுகம மற்றும் களத்துவவிலிருந்து எடுத்துவரப்படும் நீரின் அளவை கட்டுப்படுத்துகிறோம் என விளக்கமளித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri