ஆயிரக் கணக்கில் திரண்ட மாணவர்கள்: நாடாளுமன்ற வளாகத்தில் பதற்ற நிலை! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் (Video)
புதிய இணைப்பு
தொடர்ந்து பல்கலைகழக மாணவர்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மாணவர்கள் நாடாளுமன்றத்திற்கே தாங்கள் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மாணவர்கள் நாடாளுமன்றில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
மொரட்டுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவ சங்கத்தினுடைய ஆர்ப்பாட்டப் பேரணியில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி மாணவர்கள் நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி செல்வதனால் தற்போது பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
பொலிஸாரின் வீதி தடைகளை அகற்றிவிட்டு மாணவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
முதலாம் இணைப்பு
மொரட்டுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவ சங்கத்தினுடைய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது பத்தரமுல்லையில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் பொது மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.





உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 17 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
