நாட்டில் பல தொடருந்து சேவைகள் பாதிப்பு: பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு
நாட்டில் பல தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இயந்திர கோளாறு காரணமாக இன்று (14.11.2023) காலை முதல் பல தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இயந்திர கோளாறு
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இயந்திர கோளாறு காரணமாக இன்று காலை களுத்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்க இருந்த தொடருந்து இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சிலாபத்தில் இருந்து பாணந்துறை வரை பயணிக்கும் தொடருந்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 6.40க்கு பெலியத்த நோக்கி புறப்படவிருந்த தொடருந்து சேவையும் தாமதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 8 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
