கொழும்பில் பாடசாலை மாணவர்களின் மோசமான செயல்: உயிருக்கு போராடும் மாணவன்
பொரளை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது நண்பர்களுடன் வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, அவரது தாய் வந்துவிட்டதால் ஜன்னல் வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன், தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் நண்பர்கள் சிலரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

உலகின் பல இடங்களை சுற்றி பார்த்த வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இயக்கச்சியில் காத்திருந்த ஆச்சரியம்! (Video)
போதைப்பொருள்
இவர் தனது நண்பர்களுடன் வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது மாணவனின் தாயார் திடீரென வீட்டுக்கு வந்தபோது அவர்கள் தலைமறைவாக முயன்றதையடுத்து வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்த மாணவன் சுவர் உதவியால் கீழே இறங்க முயன்றபோது மூன்றாவது மாடிக்கு அருகில் கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மாணவனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
