வார முதல் நாளில் இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள்
கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடுகள் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 5 வீதத்திற்கும் அதிகமாக சரிந்ததால், இன்று (07) காலை 9.51 மணியளவில் தினசரி வர்த்தக நடவடிக்கை 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வர்த்தகம் இடைநிறுத்தப்பட்ட நேரத்தில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 639.01 புள்ளிகள் குறைந்து 14,734.34 புள்ளிகளாகவும், S&P SL20 விலைச் சுட்டெண் 240.45 புள்ளிகள் குறைந்து 4,292.90 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தன.
வாரத்தின் முதல் நாளான இன்று
இது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் மற்றும் S&P SL20 சுட்டெண்ணுடன் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது முறையே 5.30 வீதம் மற்றும் 4.16 வீத சரிவைக் குறிக்கிறது.
இதேவேளை, வாரத்தின் முதல் நாளான இன்று உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம் இருந்து வருகிறது.
ஆசியா முழுவதும் சந்தைகள் சரிவைச் சந்தித்ததால், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 281.84 புள்ளிகள் (7.37 சதவீதம்) சரிந்து 3,544.02 ஆக உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |