மொனராகலையில் பாடசாலை மாணவிகள் இருவர் மாயம்
மொனராகலை - வெல்லவாய, கொட்டவெஹெரகலய பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல்போயுள்ளனர்.
பதினைந்து வயதுடைய இரண்டு மாணவிகள் நேற்று (15) முதல் காணாமல்போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாய பிரதேசத்தில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த இரு மாணவிகளில் ஒருவர் கொட்டவெஹெரகலய பிரதேசத்தில் வசித்து வருவதுடன், அதே கிராமத்தில் வசிக்கும் அவரது நண்பி நேற்று முன்தினம் (14) மாலை அவரது வீட்டிற்கு கல்வி கற்பதற்காக வந்துள்ளார்.
இதனையடுத்து மறுநாள் காலை இரண்டு பேரையும் வீட்டில் காணவில்லை என வீட்டின் உரிமையாளர் வெல்லவாய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய, மாணவிகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri
