லங்காசிறியின் அருள் நிறை ரமழான் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி (Video)
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றானது ரமழான். தங்களது மதப்பிணைப்பை வலுப்படுத்தவும், சுற்றியுள்ளவர்களிடம் அன்பாக பழகும் நாட்களாக இது பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான், இறைவனால் மக்களுக்கு இந்நாளில் தான் அருளப்பட்டது என்ற நம்பிக்கையும் மக்களிடம் அதிகளவில் உள்ளது.
ரமழான் பண்டிகையை முன்னிட்டு எமது லங்காசிறி ஊடக குழுமம் கொழும்பு- புதுகடை பகுதியில் எமது இஸ்லாமிய குடும்பத்தினருக்காக சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.
இதில் பங்குபற்றுபவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் பெறுமதியான பல பரிசில்கள் வழங்கப்படுகின்றது. எனவே எமது இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபற்றி இணைந்துகொள்ளுங்கள்.



