அரசுக்கு எதிராக கொழும்பில் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் மூன்றாவது நாள் தொடர் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இலங்கை மின்சார சபையின் வளங்களை தனியார் மயப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆயிரக்கணக்கிற்கும் மேற்பட்ட இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தினை தற்போது மேற்கொண்டு வருவதுடன், நாடளாவிய ரீதியில் இருந்து மேலும் பலர் வருகைத் தந்த வண்ணம் உள்ளதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் டில்ஷான் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவான ஊழியர்கள் தொடருந்துகளில் வருகைத் தந்து போராட்டக் களத்தை நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
