அரசாங்கத்திற்கு எதிராக தொடரும் இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் ( Video)
நாட்டின் பொருளாதார நெருக்கடிநிலை காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் தொடர்கிறது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி இரவு பகலாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.
அத்துடன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் சகலரும் பதவி விலக வேண்டும் எனவும் இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இப் போராட்டத்தில் இளைஞர்கள், யுவதிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் மொழி, மதம், இனம் என்பவற்றை கடந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
