திடீரென கண்டிக்கு கொண்டு செல்லப்பட்ட பொலிஸ் குதிரைகள்
கொழும்பில் நிலவும் கடும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் இங்குள்ள பொலிஸ் குதிரைகளை கண்டி பொலிஸ் குதிரைப்படைப் பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உப சேவை உதவி பொலிஸ் அத்தியட்சகர் (கால்நடை மருத்துவர்) மஞ்சுள விஜயகோன் தெரிவித்துள்ளார்.
மேலதிக நடவடிக்கைகள்
இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏனைய நடவடிக்கைகள் ஏற்கனவே இரண்டு குதிரைகள் கொழும்பிலிருந்து கண்டிக்கு மாற்றப்பட்டுள்ளன.
கொழும்பு பொலிஸ் குதிரைப்படைப் பிரிவில் உள்ள குதிரைகளை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக அவை இருக்கும் கூடுகளில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இக்குதிரைகளை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பாட்டுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றிற்கு குளிர்ச்சியை வழங்க பல்வேறு மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பொலிஸ் மோப்ப நாய் பிரிவிலுள்ள நாய்களையும் கடும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் கால்நடை மருத்துவர் அமல் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
கல்யாண விஷயத்தில் நிலாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய சோழன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam