கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆபத்து - அவசரமாக மூடப்பட்ட ஒரு பகுதி
தேசிய கண் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் திடீரென மூடப்பட்டுள்ளன.
பக்டீரியா தொற்றுக்குள்ளான பல நோயாளிகள் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
எடுக்கப்பட்ட நடவடிக்கை
பக்டீரியா பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த நோயாளிகளின் உடலில் பக்டீரியா எவ்வாறு சென்றதென்பது எங்களுக்கு குழப்பமாக உள்ளது. அதனை கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பக்டீரியா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் மருந்து வகை குறித்தும் தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய, அந்த மருந்து உடனடியாக திரும்ப கோர சுகாதார அமைச்சு திரும்ப கோரும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.