பொது மக்களிடம் உதவி கோரியுள்ள கொழும்பு மாநகர சபை

Sri Lanka Politician Sri Lanka Government Crime Colombo Municipal Council
By DHUSHI Jan 22, 2026 08:37 PM GMT
Report

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளையும் தகவல்களையும் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள், குற்றவியல் நம்பிக்கை துரோகம், அதிகாரம் மற்றும் அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்தல், சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கள் மற்றும் கொள்முதல் விதிமீறல்கள் தொடர்பில் குறித்த  ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை: கையொப்பமிடாத எம்.பிகள் பகிரங்கப்படுத்திய அமைச்சர்

நம்பிக்கையில்லா பிரேரணை: கையொப்பமிடாத எம்.பிகள் பகிரங்கப்படுத்திய அமைச்சர்

முறைப்பாடுகள்

அத்துடன், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்ற முறைகேடுகள், முறையான நடைமுறைகளை மீறி முன்னெடுக்கப்பட்ட வழக்குகள் மற்றும் இணக்கப்பாடுகள், இவற்றின் மூலம் அரசாங்கத்தின் வருமானத்திற்கு ஏற்பட்ட பாரிய நட்டங்கள் என்பன குறித்தும் இதன்போது விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமர திசாநாயக்கவினால், 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ், கடந்த 2025 டிசம்பர் 30 ஆம் திகதியிடப்பட்ட 2469/08 இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

பொது மக்களிடம் உதவி கோரியுள்ள கொழும்பு மாநகர சபை | Colombo Municipal Council Help From The Public

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சட்டத்தரணி பியசேன ரணசிங்க தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏக்கநாயக்க (இலங்கை கணக்காளர் சேவை - தரம் 1), டி.எஸ். விக்ரமசிங்க (ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்) ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடம் கோரிக்கை

ஆணைக்குழு தனது முதலாவது இடைக்கால அறிக்கையை 3 மாதங்களுக்குள்ளும், இறுதி அறிக்கையை 6 மாதங்களுக்குள்ளும் ஜனாதிபதி செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதனைத் தொடருந்து,  நபர்கள் அல்லது அமைப்புகள் தமது எழுத்துமூலமான முறைப்பாடுகளைச் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பலாம்.

பொது மக்களிடம் உதவி கோரியுள்ள கொழும்பு மாநகர சபை | Colombo Municipal Council Help From The Public

செயலாளர், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, இலக்கம் 152, காலி வீதி, கொழும்பு 03. முறைப்பாடுகள் அனைத்தும் 2026 பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முறைப்பாட்டாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். தமது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்கள் அதனைக் கோர முடியும்.

இதேவேளை,  வாய்மூலமாகத் தகவல்களை வழங்க விரும்புவோர் 011 2 301 735 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து பெப்ரவரி 23ஆம் திகதிக்கு முன்னர் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உறைபனி பொழிவு: சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நுவரெலியாவில் உறைபனி பொழிவு: சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கானோர்! வெளியான தகவல்

இலங்கையில் வேலையை இழக்கும் அபாயத்தில் இலட்சக்கணக்கானோர்! வெளியான தகவல்

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US