கொழும்பு மாநாகர சபை கூட்டு எதிர்க்கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தில் மூவர் விலகல்!
கொழும்பு மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தில் பாரிய சூழ்ச்சிகள் மற்றும் குழப்பத்தில் ஈடுபட்ட கூட்டு எதிர்க்கட்சி என சொல்லிக் கொள்ளும் கும்பலில் மூவர் விலகியுள்ளதாக மாநகர சபை வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய மூன்று உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து விலகி சுயேச்சையாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர்.
விலகிய மூன்று உறுப்பினர்கள்
இவர்களில் இந்திக சஞ்சீவ: ஐக்கிய தேசியக் கட்சி - சுனந்த பத்திரண: ஐக்கிய தேசியக் கட்சி-ஹுசைன் மன்சில்: சுயேச்சைக் குழு 01 இன் தலைவர் ஆகியோரே சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

இந்தத் தீர்மானத்தின்படி குறித்த மூன்று உறுப்பினர்களும் இனிவரும் காலங்களில் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படமாட்டார்கள்.
கடந்த காலங்களில் மாநகர சபை செயற்பாடுகளில் தேவையற்ற சிக்கல்களை சந்தித்து வந்து என்பிபி அரசுக்கு இவர்கள் ஆதரவாக செயற்பாடுவார்களா என்பது இதுவரை தெரியவரவில்லை.
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam