காலி தேசிய வைத்தியசாலை தொடர்பில் சஜித் கிளப்பிய சர்ச்சை.. வெளியான தகவல்
காலியில் உள்ள தேசிய வைத்தியசாலையில் ஸ்டென்ட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியதாக வெளியான ஊடக அறிக்கைகளை குறித்த வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துள்ளது.
(ஸ்டென்ட் என்பது, இதய இரத்த நாள அடைப்பைச் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் சிறிய குழாய் ஆகும்.)
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த காலி தேசிய வைத்தியசாலை, இதய நோயாளிகளுக்கான ஸ்டென்டிங் மற்றும் ஏஞ்சியோகிராம் பணிகள் வழக்கம் போல் தொடர்வதாகவும், போதுமான அளவு ப்ரீ-டைலேடேஷன் மற்றும் போஸ்ட்-டைலேடேஷன் பலூன்கள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
போதியளவு இருப்பு
சுகாதார அமைச்சு ஒரு புதிய ஏஞ்சியோகிராம் இயந்திரத்தை வழங்கியுள்ளது, அது தற்போது நிறுவப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஆண்டு புற்றுநோய் பிரிவில் லீனியர் ஒக்சிலரேட்டர், பிராக்கிதெரபி இயந்திரம், மெமோகிராம் இயந்திரம் மற்றும் சிடி ஸ்கேனர் ஆகியவை பொருத்தப்படும்.
தெற்கு மாகாணத்தில் பக்கவாதத்தைக் கண்டறிவதை வலுப்படுத்த, இரண்டாவது எம்ஆர்ஐ ஸ்கேனர் மற்றும் டிஎஸ்ஏ இயந்திரம் ஆகியவற்றை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த விபரங்களை வழங்கிய வைத்தியசாலை, அண்மைய ஊடக அறிக்கைகளில் உள்ள கூற்றுகள், தங்களது நிறுவனத்திடம் முறையான விசாரணைகள் இன்றியே வெளியிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam