இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று (11) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றும், கேகாலையில் இருந்து மாவனல்லை நோக்கி பயணித்த அரச பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தொழிநுட்பக்கோளாறு
இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறையில் இருந்து வந்த பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக சாரதிக்கு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
