மூடப்படும் கீழ் கடுகண்ணாவ வீதி! சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கொழும்பு - கண்டி பிரதான வீதியின், கீழ் கடுகன்னாவ பகுதி, இன்று(23.11.2026) இரவு முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது.
இன்று இரவு 11 மணி முதல் நாளை(24) காலை 06 மணி வரை குறித்த வீதி முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கீழ் கடுகண்ணாவ பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பாறைகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கும், அதனுடன் தொடர்புடைய பராமரிப்புப் பணிகளுக்காகவும் வீதி மூடப்படுகின்றது.

இது குறித்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, மாவட்டச் செயலாளர் மற்றும் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளுக்கும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, குறித்த காலப் பகுதியில் இந்த வீதியைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் மோடியால் தங்கத்தின் விலை குறைந்தது... நன்றி சொன்ன வணிக மற்றும் தொழில் வர்த்தக சபை News Lankasri
ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri