கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்து - 8 பேர் காயம்
மாரவில - மூடுகடுவ பிரதேசத்தில் இன்று காலை (02.05.2023) பயணிகள் பேருந்துடன் லொறியொன்று மோதியமையினால் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து, லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹலவத்தை - கொழும்பு பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்திற்கான காரணம்
முதுகடுவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது லொறி மோதியதில், பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியுள்ளது.
இதன் காரணமாக மின்கம்பம் சேதமடைந்துள்ளதுடன், மாரவில உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் , இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பேருந்து சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
