பெற்றோரின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன்.. நீதிமன்றின் உத்தரவு
பலாங்கொடை - தெஹிகஸ்தலாவையில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனின் பெற்றோரும், அவரது தாயாரின் நண்பர் என்று கூறப்படுபவரும் ஓகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இன்று பலாங்கொடை நீதிமன்றில் மஜிஸ்திரேட் தேஷ்பந்து சூரியபதாபேதி முன் முன்னிலைபடுத்தப்பட்டனர்.
பாதுகாப்பு
சிறுவனின் தாயும் தந்தையும் குழந்தைக்கு பாதுகாப்பை வழங்கத் தவறியதாகவும் அலட்சியமாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் தாயின் நண்பர் என கூறப்படும் நபர் பல நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுக்கள் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தையின் பிரேத பரிசோதனை பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டு, இறுதி சடங்குகளுக்காக உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் : முகம் முழுவதும் காயங்கள்! உறவினர்களின் பகிரங்க வாக்குமூலம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 19 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
