ஈராக்கில் 600 யாத்திரிகர்கள் வைத்தியசாலையில்...
ஈராக்கில் குளோரின் வாயு கசிவு காரணமாக 600 புனித யாத்திரிகர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக்கில் நஜஃப் மற்றும் கர்பலா எனும் இரு புனித நகரங்களுக்கு இடையில் உள்ள பாதையில், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கசிந்த குளோரின் வாயுவை சுவாசித்த 600இற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்து
இதுகுறித்து ஈராக் சுகாதார அமைச்சும் வெளியிட்டுள்ள அறிக்கையில், "621 பேர் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அனைவரும் தேவையான சிகிச்சையை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
𝐎𝐯𝐞𝐫 𝟔𝟎𝟎 𝐩𝐢𝐥𝐠𝐫𝐢𝐦𝐬 𝐡𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥𝐢𝐬𝐞𝐝 𝐚𝐟𝐭𝐞𝐫 𝐜𝐡𝐥𝐨𝐫𝐢𝐧𝐞 𝐠𝐚𝐬 𝐥𝐞𝐚𝐤 𝐢𝐧 𝐈𝐫𝐚𝐪https://t.co/Ae8kJzCqoH pic.twitter.com/46TfPXIxJS
— Punch Newspapers (@MobilePunch) August 10, 2025
இதனிடையே, பாதுகாப்பு படைகள் இந்த வாயு கசிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், ஈராக் நாட்டின் அடிப்படை கட்டமைப்புகள் பல ஆண்டுகளாக நடந்த போர்கள் மற்றும் ஊழல்களால் சீரழிந்துள்ளன.
இதற்குமுன், ஜூலையில் குத் நகரில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 60இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 19 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
