இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் இந்திய தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளை இன்றையதினம் (10) சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்கள்.
விரிவான பேச்சுவார்த்தை
இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சத்தியாஞ்சல் பாண்டே மற்றும் இந்திய இணை உயர்ஸ்தானிகர் (கண்டி) வீ.எஸ். சரண்யா ஆகியோரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில், இருநாட்டு நட்புறவு, தொழிலாளர் நலன், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்போது இ.தொ.கா சார்பில் நிதிச்செயலாளரும், தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாநகர சபை பிரதி மேயர் சிவன்ஜோதி யோகராஜ், கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத், அமைப்பாளர் சின்னையா பாலகிருஸ்னன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் : முகம் முழுவதும் காயங்கள்! உறவினர்களின் பகிரங்க வாக்குமூலம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு குடிக்க நீர் கூட வழங்க கூடாது - பழிவாங்கும் பாகிஸ்தான் News Lankasri
