கொழும்பில் மிக மோசமாக நடத்தப்பட்ட ஹோட்டல்கள் - நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சுகாதார சீர்கேடுகளுடன் நடைபெற்ற ஹோட்டல்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒல்கட் மாவத்தையில் மிகவும் அசுத்தமான நிலையில் இயங்கி வந்த 05 ஹோட்டல்களை மூடுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
ஒல்கட் மாவத்தையில் அமைந்துள்ள இந்த ஹோட்டல்களை கடந்த 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் கொழும்பு மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பார்வையிட்டதுடன் அவை மிகவும் அசுத்தமான நிலையில் செயற்பட்டமையினை அவதானித்துள்ளனர்.
பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தல்
இந்த 05 ஹோட்டல்களுக்கு எதிராக நேற்று முன்தினம் பொதுச் சுகாதார பரிசோதகரால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் அந்த ஹோட்டல்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஹோட்டல்களை பொது சுகாதார பரிசோதகர்கள் இதற்கு முன்னர் பரிசோதித்து, ஹோட்டல்களை தூய்மையான முறையில் நடத்துமாறு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதாக பொது சுகாதார பரிசோதகர்கள் நீதிமன்றில் அறிவித்தனர்.
மூடப்பட்ட 05 ஹோட்டல்களை மிகவும் தூய்மையாக அமைத்து குறைபாடுகளை பூர்த்தி செய்யுமாறும், அதனை பார்வையிட்டு பொது சுகாதார பரிசோதகர்கள் மூலம் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
