70வது ஆண்டில் கால் பதிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரி - இரத்மலானை!
ஏழு தசாப்தங்களில் இந்து மரபையும் தமிழர் விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டு தனக்கென தனி முத்திரை பதித்து இன்றும் கல்விப் போதனை கூறுகின்றது கொழும்பு இந்துக் கல்லூரி - இரத்மலானை.
இலங்கையில் பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் சுதந்திர இலங்கையில் தமிழர்கள் இந்து மத நிறுவனங்களின் உதவியைப் பெற்று வாழ்ந்த மக்கள் தலைநகரில் வாழும் பிள்ளைகள் இந்துப் பண்பாட்டுச் சூழலில் கல்வி கற்க வேண்டும் என சிந்தித்தனர்.
1951 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி கொழும்பு வாழ் கல்விமான்கள் இந்து மதப் பெரியார்கள், அரசியல் விற்பன்னர்கள், நலன்விரும்பிகள் போன்றோர் ஒன்றுகூடி இந்து வித்தியா விருத்திச் சங்கம் என ஒரு சங்கத்தை நிறுவினர்.
இச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பு நீதியரசர் திரு.செல்லப்பா நாகலிங்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இருபத்து மூன்று பெரியார்கள் சபையில் அங்கம் வகித்தனர்.
இவர்களது அயராத உழைப்பின் பயனால் 1951 ஆம் ஆண்டு பெப்ரவரி பன்னிரண்டாம் திகதி 48 மாணவர்களுடன் பிள்ளையார் பாடசாலை என்னும் திருநாமத்துடன் பம்பலப்பிட்டி ஸ்ரீ கதிரேசன் ஆலய மண்டபத்தில் உதயமாயிற்று.
இப்பாடசாலை பம்பலபிட்டி ஸ்ரீசம்மாங்காடு மாணிக்க விநாயகர் ஆலயம்இ ஸ்ரீ கதிரேசன் ஆலயம் ஆகியவற்றின் தர்மகர்த்தா சபையினரால் வழங்கப்பட்ட தருமசாசன காணியில் அமைக்கப்பட்டது.
1951ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட 'பிள்ளையார் பாடசாலை' ஆரம்பத்தில் பம்பலபிட்டியவில் ஆரம்ப கல்வியாகவும், இரத்மலானையில் உயர் கல்விக்காகவும் இந்து வித்தியா விருத்திச் சங்கத்தினரின் முகாமையின் கீழ் இயங்கியது
பிள்ளையார் பாடசாலை என்ற பெயரில் இயங்கிவந்த இப் பாடசாலையானது 1962ம் ஆண்டு கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை என்று பெயர்மாற்றப்பட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை உள்ள தமிழர்களுக்கு காத்திரமான கல்விப் போதனைகளை கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை வழங்கி வருகின்றது.
1998ம் ஆண்டு அகில இலங்கை இந்து மாமண்றத்தினால் நிறுவப்பட்ட விடுதி மூலமாக அக்காலகட்டத்தில் அகதிகளாக வந்த மாணவர்களுக்கு தங்குமிடத்துடன் கூடிய பாடசாலையாக மாற்றம் பெற்றது.
1951 ஆம் ஆண்டு சிறு விதையாக நிலத்தில் விழுந்து இன்று பெரு விருட்சமாக வளர்ந்து இருக்கும் இப் பாடசாலையூடாக ஒன்றாக பயணித்தவர்கள் இன்னும் போற்றப்பட வேண்டியவர்கள்.
குறிப்பாக அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கல்விசாரா ஊழியர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.
கொழும்பு இந்துக் கல்லூரி - இரத்மலானையில் கல்வி கற்ற மாணவர்கள் பலர் இன்று உலகெங்கிலும் பரந்து நல்லதொரு ஸ்தானத்தில் நிலை கொண்டிருக்கின்றனர்.
காரணம் அனைவரும் இக்களத்தில் பட்டை தீட்டப்பட்டிருக்கின்றனர். பட்டை தீட்டப்பட்ட வைரம் எப்போதும் மிளிரத்தானே செய்யும்.
நவீன தொழில்நுட்ப உலகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் தன்னை எப்போதுமே புதுப்பித்துக் கொண்டிருக்கின்றது கொழும்பு இந்துக் கல்லூரி - இரத்மலானை புதிய கல்விச் சிந்தனைகளையும் எண்ணங்களையும் தாங்கிய வண்ணம் கல்வி நடை போடுகின்றது என்றே கூறவேண்டும்.
அத்துடன் மேல்மாகாணத்தில் 2018ம் ஆண்டு முதல் தமிழ் மொழி மூலமான ஒரு விளையாட்டு பாடசாலையாகவும் திகழ்வது பெருமைக்குரியது.
கல்லூரி பயணத்தில் கைகோர்த்த அதிபர்களதும், ஆசிரியர்களதும் தீராத முனைப்பும் உழைப்பும் இவ்வெற்றிப் பயணத்திற்கு தீனி போட்டிருக்கின்றது.
எழுபது ஆண்டுகளாய் நிறைந்த பணியாற்றிய கொழும்பு இந்துக் கல்லூரி - இரத்மலானை வருகின்ற காலங்களிலும் நிமிர்ந்தோங்கி வீறுநடை போடும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
கல்லூரிக்குள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கற்பக விநாயகன் எல்லா நலன்களையும் தந்தருளட்டும்.









ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
