துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞன்! பதற வைக்கும் சிசிரிவி காட்சிகள்
கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிராண்ட்பாஸ் நாகலகம் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், நேற்று(05.07.2023) மாலை அடையாளம் தெரியாத மூவரால் கத்தியால் வெட்டி குறித்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த இளைஞரை வெட்டி கொலை செய்யும் காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிசிரிவி காட்சிகள்
இந்நிலையில் உயிரிழந்தவர் நாகலகம் வீதியில் சென்று கொண்டிருந்த போது, சிலர் அவரை துரத்திச் சென்று தாக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து தப்பிக்க அருகிலிருந்த கடைக்குள் ஓடிய இளைஞரை மர்ம நபர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றதுடன், சம்பவத்தில் பலத்த காயமடைந்த இளைஞனை பிரதேசவாசிகள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த இளைஞரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்யும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தில் வெல்லம்பிட்டிய வடுல்லாவத்தை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார ஷமல் சசிந்து என்ற இருபத்தைந்து வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |