கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் படுகொலை
கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் நாகலகம் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், இன்று(05.07.2023) மாலை அடையாளம் தெரியாத மூவரால் கத்தியால் வெட்டி குறித்த இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் வெல்லம்பிட்டிய வடுல்லாவத்தை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார ஷமல் சசிந்து என்ற இருபத்தைந்து வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை
இந்த கொலைச்சம்பவத்துடன் மூவர் தொடர்புபட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முன் பகையே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்ய கிராண்ட்பாஸ் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |