கொழும்பில் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமிகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பில் வீட்டிருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பிய மூன்று சிறுமிகளின் நன்னடத்தை அறிக்கையை பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மூன்று சிறுமிகளையும் மனநல ஆலோசகர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும் பிரதான நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி எந்தவொரு குற்றச் செயல்களும் வெளிப்படுத்தப்படவில்லை என வாழைத்தோட்ட பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த வழக்கை நிறைவு செய்ய பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார்.
கொழும்பில் மூன்று சிறுமிகள் காணாமல்போயுள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த போது சிறுமிகள் வீடு திரும்பியிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் இசை மற்றும் மேற்கத்திய நடனப் பயிற்சிக்காக பொருத்தமான இடத்தைத் தேடி வீட்டை விட்டு வெளியேறியதாக விசாரணைகளில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி....
காணாமல் போன சிறுமிகள் வீடு திரும்பினர்! - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் (Video)
கொழும்பில் காணாமல்போன சிறுமிகள் வழங்கியுள்ள வாக்குமூலம்: பொலிஸ் ஊடக பேச்சாளர் (Exclusive)
கொழும்பில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள்! - நீதிபதி கடும் எச்சரிக்கை



