கொழும்பில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள்! - நீதிபதி கடும் எச்சரிக்கை
கொழும்பு வாழைத் தோட்டம் பொலிஸ் பிரிவில் வசித்து வந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்படும் சிறுமிகள் மூவரையும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சிறுமிகள் மூவரும் இன்று கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பொலிஸாரின் கோரிக்கையை ஏற்ற நீதவான் சிறுமிகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டுக்கு அறிவிக்காமல் வௌியேறினால் சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் என நீதவானால் குறித்த மூன்று சிறுமிகளும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் குறித்த முறைப்பாடை எதிர்வரும் 16ம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, கொழும்பு 12 இல் வசிக்கும் மூன்று சிறுமிகள் கடந்த 8ம் திகதி காணாமல் போயிருந்த நிலையில், நேற்றைய தினம் வீடு திரும்பியிருந்தனர்.
இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறியமைக்காக காரணத்தை பொலிஸார் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
கொழும்பு நகரை சேர்ந்த மூன்று சிறுமிகளை காணவில்லை : தந்தை பொலிஸில் முறைப்பாடு
காணாமல் போன சிறுமிகள் வீடு திரும்பினர்! - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் (Video)
கொழும்பில் காணாமல்போன சிறுமிகள் வழங்கியுள்ள வாக்குமூலம்: பொலிஸ் ஊடக பேச்சாளர் (Exclusive)
