காணாமல் போன சிறுமிகள் வீடு திரும்பினர்! - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் (Video)
புதிய இணைப்பு
கொழும்பில் காணாமல் போனதாக கூறப்படும் மூன்று சிறுமிகளும் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மாயமான சிறுமிகள் : சிசிரிவி காணொளி வெளியானது
கொழும்பு 12 இல் வசிக்கும் மூன்று சிறுமிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.
முச்சக்கர வண்டியில் நேற்று காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற இந்த மூன்று சிறுமிகளும் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவர்கள் சம்பந்தமாக எந்த தகவலும் வீட்டுக்கு கிடைக்கவில்லை என தந்தை வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகளும், அவர்களின் உறவினர் முறை சகோதரியான சிறுமியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள் மூவரும் 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த மூன்று சிறுமிகளும் தமது பைகளை எடுத்துக் கொண்டு வெளியேறிச் செல்லும் சிசிரிவி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த சிறுமிகள் கடத்தப்பட்டனரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் தாமாகவே வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றனரா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு வாழைத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமது செய்திப்பிரிவுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்..
கொழும்பு நகரை சேர்ந்த மூன்று சிறுமிகளை காணவில்லை : தந்தை பொலிஸில் முறைப்பாடு

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
