கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 60 சதவீத வைத்தியர்கள் பற்றாக்குறையால் பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருத்துவ அறிக்கைகளை வழங்குவதில் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக அரசாங்க சிறப்பு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக,பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
நெருக்கடி நிலை
குறித்த வைத்தியசாலையில் மூன்று விசேட வைத்தியர்கள் இருந்த நிலையில், மேலும் ஒரு வைத்தியர் ஓய்வு பெற்றதால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மருத்துவ சிகிச்சை அறுபது சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.
கூடுதலாக, கிளினிக்கில் போதுமான மூத்த வைத்தியர்கள் இல்லை என்றும், கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் பல வாரங்களாக சிக்கித்தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சிலர் சிகிச்சை பெறாமல் திரும்பிச்செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri