புகையிரத கழிவறையினுள் சிசுவொன்றை கைவிட்ட பெற்றோர்! தாயை கைது செய்த தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக விசாரணை
பண்டாரவளை தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத கழிவறையினுள் கைவிடப்பட்ட சிசு
கடந்த 10ஆம் திகதி கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத கழிவறையினுள் சிசுவொன்றை விட்டுச் சென்ற பெண்ணை பண்டாரவளை தலைமையக பொலிஸார் கைது செய்யும் போது பொலிஸ்மா அதிபரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை பின்பற்றாத காரணத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை கைது செய்த போதும், சந்தேக நபரிடம் விசாரணை நடத்திய போதும், விசாரணையின் விபரங்களை கருத்திற் கொள்ளாமலும் சந்தேக நபரான பெண்ணை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாக பண்டாரவளை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பில் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் பரிசோதகர் செயற்பட தவறியதன் காரணமாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் தலைமையகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
