கொழும்பில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் தப்பியோட்டம்
ஹோமாக பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத் தாக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் செல்வதாக கூறி மசாஜ் நிலையத்திற்கு சென்ற மனைவி மீது கோபமடைந்த இரகசிய கணவன் இவ்வாறு கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
கொட்டாவ ருக்மல்கம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளார்.

இந்த பெண் தனது முதல் கணவரை கைவிட்டு வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். குறித்த நபரும் தனது மனைவியை கைவிட்டுள்ளார். இருவருக்கும் 5 வயதில் பிள்ளை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.
ஆதார வைத்தியசாலை
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் வறுமை காரணமாக குறித்த பெண் குறித்த கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் உள்ள ஆடை நிறுவனமொன்றில் பணிபுரியச் சென்றுள்ளார்.
ஆனால் குறித்த பெண் வேலைக்கு செல்லும் நேரம் மற்றும் செயற்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மசாஜ் நிலையத்தில் சேவை வழங்கப் போவது தெரிய வந்த நிலையில் மனைவியின் வாயிலும், உடலிலும் கூரிய ஆயுதத்தால் பல இடங்களில் சரமாரியாகத் தாக்கிவிட்டு, அந்த நபர் தப்பியோடியுள்ளார்.
படுகாயமடைந்த பெண்ணை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பேச முடியாத அளவுக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam