பத்தரமுல்ல கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் தலைவரை கொலை செய்ய முயற்சி! விசாரணையில் வெளியான தகவல்
பத்தரமுல்ல கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் தலைவரை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல்கள் மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளியாகியுள்ளன.
இதன்போது முன்னாள் தலைவரும் பிரதான சந்தேகநபருமானவரின் நிதி மோசடிகள் வெளிப்பட்டதன் காரணமாகவே அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகள்
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குற்றத்தின் பிரதான சந்தேகநபர் மாத்தறை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றைய சந்தேகநபர்களில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர், பேருந்து ஒன்றின் உரிமையாளர் மற்றும் பேருந்து நடத்துநர் ஆகியோர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |